![சீரியல் நடிகர் கார்த்திக் 'black 'ன்' white" படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடு.., படு குஷியில் கொண்டாடி வரும் ரசிகர்கள்!! சீரியல் நடிகர் கார்த்திக் 'black 'ன்' white" படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடு.., படு குஷியில் கொண்டாடி வரும் ரசிகர்கள்!!](https://enewz.in/wp-content/uploads/2022/10/feature-image-2-4.webp)
சீரியல் நடிகர் கார்த்திக் நடித்த black ‘n’ white திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்:
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ். அந்த சீரியலில் நன்றாக நடித்து வந்த நிலையில், சில காரணத்தால் வெளியேறினார். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். இதனை தொடர்ந்து அவருடைய ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அந்த வகையில் 465 மற்றும் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்ற படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை தொடங்கிய இவர், ரசிகர்கள் ஒத்துழைப்போடு படத்தை முடித்துக் காட்டுவேன் என்று சபதமிட்டு ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டிருந்தார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு Black ‘ன்’ White என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 8 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.