NO.1 அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து.., அப்பப்பா என்ன ஒரு ஆட்டம்.., மிரண்டு போன ரசிகர்கள்!!

0
NO.1 அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து.., அப்பப்பா என்ன ஒரு ஆட்டம்.., மிரண்டு போன ரசிகர்கள்!!
NO.1 அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து.., அப்பப்பா என்ன ஒரு ஆட்டம்.., மிரண்டு போன ரசிகர்கள்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்தது.

AUS VS NZ

T20WC தொடருக்கான முதல் சூப்பர் 4 ஆட்டம் இன்று தொடங்கியது. இந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் தொடக்கமே அதிரடி காட்டத் தொடங்கினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வீரர்களின் சிறப்பான விளையாட்டால் இந்த அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் குவித்து எதிரணிக்கு அதிக இலக்கை நிர்ணயித்தது. இதில் கான்வே 92 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

இந்தியா vs பாகிஸ்தான் – இந்த சேனலில் நேரடியாக பார்க்கலாம்.., போட்டி குறித்த முழு விவரம் உள்ளே!!

அதாவது அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் களான டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது.

இந்த வேர்ல்ட் கப் தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இவ்வளவு மோசமான தோல்வியை சந்திக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும் உலகின் நம்பர் 1 அணியவே அதிரடியாக வீழ்த்திய நியூசிலாந்து அணி இனி வரும் போட்டிகளில் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனிவரும் ஆட்டங்களில் மூலம் உலக கோப்பை தொடர் களை கட்ட தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here