ஜாலியா ‘ஜாவா’ ரெய்டு போலாமா – அசத்தலான ‘ஜாவா 42 BS-6’ மாடல் அறிமுகம்..!

0

ஜாவா பைக் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜாவா 42 பைக்கின் BS-6 மாடலை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இது ஜாவா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன சிறப்பம்சங்கள்..!

ஜாவா 42 பாரம்பரிய இரட்டை சைலென்சர், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் மற்றும் பாபர்-ஸ்டைல் வடிவமைப்பு உடன் வருகிறது.

என்ஜின் – -293 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு இன்ஜின் ( பியூவல் இன்ஜெக் ஷன் சிஸ்டம்)
பவர் – 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்
கியர் – 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்
பிரேக்கிங் – டிஸ்க் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அல்லது டுயூவல் சேனல் ஏபிஎஸ்

ஜாவா 42 விலை விபரம்:

இந்த புதிய ஜாவா 42 மாடல் அதன் பழைய வெர்சனை விட ரூ. 5000 – ரூ. 10,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஜாவா 42 சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ரூ. 1.60 லட்சம்
ஜாவா 42 டியூவல் சேனல் ஏபிஎஸ்- ரூ.1.69-1.74 லட்சம் (எக்ஸ்ஷோரூம் விலை)

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here