பும்ராவுக்கு ஐபிஎல் விளையாடுவதே இலக்கா?? அப்போ இந்திய அணிக்கு திரும்புவது எப்போது??

0
பும்ராவுக்கு ஐபிஎல் விளையாடுவதே இலக்கா?? அப்போ இந்திய அணிக்கு திரும்புவது எப்போது??
பும்ராவுக்கு ஐபிஎல் விளையாடுவதே இலக்கா?? அப்போ இந்திய அணிக்கு திரும்புவது எப்போது??

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

பும்ரா:

இந்திய அணியின் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டான பும்ரா கடந்த செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பையில் விளையாடிய பிறகு, இன்னும் அணிக்கு திரும்பாததாது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தற்போது விளையாடி வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ரா இணைந்துள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், பிசிசிஐயானது பும்ராவை அவசரப் படுத்த வேண்டாம் என எண்ணி மீண்டும் அணியில் இருந்து விலகியது. இதனை தொடர்ந்து, இவருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி காயத்தை கருத்தில் கொண்டு இன்னும் 2 மாதம் பும்ரா ஓய்வில் இருக்கட்டும் என பிசிசிஐ அறிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தன. இதனால், இவர் மிக முக்கிய தொடராக பார்க்கப்படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் களமிறமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பைக்கு பிறகு களமிறங்கிய மெஸ்ஸி…, ஆங்கர்ஸ் அணியை வீழ்த்தி PSG அபாரம்!!

இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு, ஐபிஎல் ஆரம்பித்து விடும் என்பதால், பும்ரா தனது மும்பை அணிக்காக களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் பிறகு, பும்ரா தனது முதுகு வலி காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டால், செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம். இவர் அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில், 50 ஓவர் உலக கோப்பையில் களமிறங்குவது சந்தேகம் தான். இதிலிருந்து, பும்ராவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவது மட்டுமே இலக்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here