வாரிசு கொண்டாட்டத்தில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த சர்பரைஸ்!!

0
வாரிசு கொண்டாட்டத்தில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த சர்பரைஸ்!!
வாரிசு கொண்டாட்டத்தில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த சர்பரைஸ்!!

தென்னிந்திய சினிமாவில் இளைய தளபதி என்ற புகழோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் நேற்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் தளபதி 67 படம் குறித்த தகவல் வாரிசு படத்தின் ரிலீஸ்க்கு பின் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் ப்ரோமோ வரும் ஜனவரி 26 ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

படு திரில்லராக உருவாகி வரும் “ரன் பேபி ரன்” திரைப்படம்.., புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்!!

அதுபோக இப்படத்தில் தளபதிக்கு 7 வில்லன்கள் களமிறங்க போவதாக அண்மையில் படக்குழுவினர் தெரிவித்தனர். அந்த வகையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளனர். இப்போது இவர்களுடன் இணைந்து மலையாள ஆக்டர் நிவின் பாலியும் நடிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here