படு திரில்லராக உருவாகி வரும் “ரன் பேபி ரன்” திரைப்படம்.., புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்!!

0
படு திரில்லராக உருவாகி வரும்
படு திரில்லராக உருவாகி வரும் "ரன் பேபி ரன்" திரைப்படம்.., புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்!!

நடிகர் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ரன் பேபி ரன்:

ஆரம்பத்தில் ஆர் ஜே-வாக பணியாற்றி தற்போது நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குபவர் தான் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் படக்குழுவினர் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் ரன் பேபி ரன் திரைப்படத்தை இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் திரில்லராக உருவாகி வரும் இப்படத்திற்கு சாம் சி எஸ் என்பவர் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ரீச் ஆனது.

பிரபு தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தாரு., எனக்கும் அவருக்கும் இப்படி தான் பழக்கம்? குஷ்பூ ஓபன் டாக்!!

இந்நிலையில் இப்படத்தை குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ரன் பேபி ரன் திரைப்படத்தின் “ரன் பேபி ரன்” தீம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த தீம் பாடல் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here