3 வெவ்வேறு சாதனைகளை படைக்க உள்ள இந்திய வீரர்கள்…, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் நிகழ்த்துவார்களா??

0
3 வெவ்வேறு சாதனைகளை படைக்க உள்ள இந்திய வீரர்கள்..., ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் நிகழ்த்துவார்களா??
3 வெவ்வேறு சாதனைகளை படைக்க உள்ள இந்திய வீரர்கள்..., ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் நிகழ்த்துவார்களா??

இந்தூரில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டி மூலம், ஜடேஜா மற்றும் விராட் கோலியை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

ரோஹித் சர்மா:

பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3 வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. இரு அணிகளுக்கும் இந்த போட்டியின் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுவதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும், இந்த போட்டியின் மூலம், இந்திய வீரர்கள் பலர் வெவ்வேறு பிரிவுகளில் சாதனை படைக்க காத்துள்ளனர். அதாவது, ஆல் ரவுண்டரான ஜடேஜா, இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் 500 விக்கெட் மற்றும் 5000 ரன்கள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும், விராட் கோலி 300 கேட்சுகளை எதிர்நோக்கி உள்ள சாதனையும் அடைய உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு மும்பை சிலை…, வெளியான நியூ அப்டேட்!!

இந்த வகையில், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சர்வதேச அளவில் 17,000 ரன்களை எட்ட உள்ளார். அதாவது, இவர், 50 ஓவரில் 9782, டி20யில் 3853 மற்றும் டெஸ்டில் 3320 என மொத்தமாக 16955 ரன்களை குவித்துள்ளார். இவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்டில், இன்னும் 45 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச அளவில் 17,000 ரன்களை அடைய உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here