ISL 2022: ஏடிகே மோகன் பகான் அணி அசத்தல் வெற்றி…, புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??

0
ISL 2022: ஏடிகே மோகன் பகான் அணி அசத்தல் வெற்றி..., புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??
ISL 2022: ஏடிகே மோகன் பகான் அணி அசத்தல் வெற்றி..., புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??

இந்திய சூப்பர் லீக் தொடரில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்த்து ஏடிகே மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில், ஏடிகே மோகன் பகான் அணியை எதிர்த்து நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி மோதியது. இதில், ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்கள் வரையிலும் இரு அணிகளும் ஒரு கோலுக்காக போராடியே வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, வேகம் காட்ட தொடங்கிய ஏடிகே மோகன் பகான் அணியின் லிஸ்டன் கோலாகோ 35 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற வழி வகுத்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 0-1 என பின் தங்கி இருந்தது. இதனை தொடர்ந்து, தொடங்கிய 2வது பாதியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் 81 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

இந்திய அணி தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்…, பளிச் என்று உடைத்த ரோஹித் சர்மா!!

கூடுதலாக ஒரு கோல் அடித்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற முனைப்பில் விளையாடிய இரு அணிகளில், ஏடிகே மோகன் பகான் அணியின் சுபாசிஷ் போஸ் 89 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றி மூலம், ஏடிகே மோகன் பகான் அணி, நடப்பு isl லீக் 5 போட்டிகளில் விளையாடி 3 ல் வெற்றி, 1ல் தோல்வி, 1ல் டிரா செய்து 10 புள்ளிகளுடன் 11 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here