இந்திய அணி தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்…, பளிச் என்று உடைத்த ரோஹித் சர்மா!!

0
இந்திய அணி தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்..., பளிச் என்று உடைத்த ரோஹித் சர்மா!!
இந்திய அணி தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்..., பளிச் என்று உடைத்த ரோஹித் சர்மா!!

இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததற்கு இது தான் முக்கிய காரணம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை 2022:

ஐசிசி சார்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடர், இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த தொடரில், நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை செய்தனர். இதில், இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் என ரசிகர்கள் மட்டும் இல்லாமல், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இந்த எதிர்ப்பார்ப்பை உடைத்து, இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த தோல்வியால், அரையிறுதியுடன் இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பை பயணத்தை முடித்துக் கொண்டது.

இந்தியா விளையாட உள்ள முத்தரப்பு தொடர்…, உலக கோப்பைக்குமுன் தீவிர பயிற்சியா?? முழு விவரம் உள்ளே!!

அரையிறுதியில் அடைந்த இந்த மோசமான தோல்வி குறித்து ரோஹித் சர்மா, போட்டியின் ஆரம்பத்தில் ரன்கள் எடுக்க தவறினாலும், கடைசி நேரத்தில் ஸ்கோர் சற்று உயர்ந்தது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பந்து வீச்சு சொதப்பல் ஆனது. மேலும், ஸ்விங்கும் சரியாக அமையவில்லை என்று தோல்விக்கான காரணங்களாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here