ஆதி பணம் திருடிய விஷயத்தை ஜெசியிடம் உடைத்த அர்ச்சனா., குடும்பத்தில் வெடித்த பூகம்பம்.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

0
ஆதி பணம் திருடிய விஷயத்தை ஜெசியிடம் உடைத்த அர்ச்சனா., குடும்பத்தில் வெடித்த பூகம்பம்.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!
ஆதி பணம் திருடிய விஷயத்தை ஜெசியிடம் உடைத்த அர்ச்சனா., குடும்பத்தில் வெடித்த பூகம்பம்.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நாளுக்கு நாள் புது புது திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இன்றைய எபிசோடில் ஆதி, ஜெசி, சிவகாமி, ரவி மற்றும் சரவணன் ஆகியோர் பியூட்டி பார்லர் கடைக்காக ஓனரை பார்த்து வாடகை மற்றும் அட்வான்ஸ் பற்றி பேசுகின்றனர். கடை ஓனர் அட்வான்ஸ் 3 லட்சம் என்றும், வாடகை 15 ஆயிரம் என்று சொல்கிறார். இதை கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிகமாக இருக்கு கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் குறைச்சுக்கோங்க என விவாதம் செய்கின்றனர்.

அந்த நேரத்தில் அர்ச்சனா செந்தில் இருவரும் அவர்களது கடையை விரிவு படுத்துவதற்காக இந்த கடையை வாடகைக்கு எடுக்க வந்துள்ளனர். ஆனால் இவர்களை பியூன் வெளியே உட்கார வைத்து உள்ளே ஒரு பார்ட்டி பேசிக்கிட்டு இருக்காங்க வெயிட் பண்ணுங்க என சொல்ல வாடகை எவ்வளவு என விசாரிக்க வாடகை 15000 ரூபாய் அட்வான்ஸ் 3 லட்சத்து 20 ஆயிரம் என சொல்ல எங்களுக்கு ஓகே தான் என அர்ச்சனா கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து ஆதி எங்களுக்கு கடை பிடிச்சிருக்கு ஓகே தான் என சொல்லி 50000 அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போடுகிறார். பிறகு பியூன் அர்ச்சனா, செந்திலிடம் இரண்டு நாள் கழிச்சு வாங்க என சொல்லி அனுப்பி விடுகிறார். ஆனால் அர்ச்சனா பால் பாட்டிலை மறந்து வச்சுட்டு வந்ததாக செந்திலிடம் சொல்ல மீண்டும் அவர்கள் திரும்ப வருகின்றனர். அந்த நேரத்தில் சிவகாமி, ஜெசி எல்லாரும் வெளியே வர அவர்களை பார்த்து அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். சிவகாமி செந்திலிடம் நீங்க இங்க என்ன பண்றீங்க என செந்திலிடம் கேட்க அர்ச்சனா கடையை நாங்க வாடகைக்கு எடுக்க வந்தோம் என சொல்லுகிறார்.

வசமாக சிக்கிக்கொண்ட இனியா.., வர்ஷினியால் எழிலை விட்டு விலகும் அமிர்தா.., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு!!

பிறகு அர்ச்சனா கடை எங்களுக்கு தான் வேணும் என சொல்ல அதற்கு ஜெசி நாங்க அட்வான்ஸ் கொடுத்துட்டோம் என சொல்லி விவாதம் செய்கின்றனர். இறுதியில் ஆதி அர்ச்சனாவிடம் எதிர்த்து பேசுவதை பார்த்து செந்தில் கோபமடைகிறார். இப்படியே வாக்குவாதம் பெருசாக இறுதியில் செந்தில் ஆதியை அடிக்க கை ஓங்குகிறார். பிறகு இருவரையும் சிவகாமி திட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. ஆனால் அடுத்து வரும் எபிசோடுகளில் அர்ச்சனா ஜெசியிடம் ஆதி வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் பணம் திருடியதை போட்டு உடைக்கிறார். இதனால் அடுத்து என்ன பிரச்சனை நடக்க போகிறது என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here