சம்பளத்தை எதிர்பார்த்து ICC தொடரில் கோட்டை விட்ட இந்திய வீரர்கள்.., BCCI எடுக்க போகும் முடிவு என்ன?

0
ஆசிய கோப்பை தோல்விக்கு IPL தான் காரணமா? கதறும் ரசிகர்கள்.., BCCI முடிவு என்ன?
ஆசிய கோப்பை தோல்விக்கு IPL தான் காரணமா? கதறும் ரசிகர்கள்.., BCCI முடிவு என்ன?

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சரியாக விளையாடததற்கு வருடம் வருடம் நடத்தப்படும் IPL தொடர்கள் தான் காரணம் என ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

இந்திய ரசிகர்கள் கோபம்!

ஆசிய கோப்பை தொடரில் தகுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் இறுதிப்போட்டிக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு 8 வது முறையாக ஆசிய கோப்பை பட்டத்தை இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் அனைவரும் சற்று கலக்கத்துடன் உள்ளனர். மேலும் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி படு மோசமாக விளையாடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா, சூர்ய குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி விட்டார் என அனைவரும் நினைத்த வேளையில் மீண்டும் டக் அவுட் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி வருவதால் மிகுந்த கோபத்தில் உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதற்கு IPL தொடர் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதாவது அனைத்து இந்திய வீரர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல் போட்டியிலும், அதில் கிடைக்கும் அதிக வருமானத்தின் மீதும் தான் உள்ளது. அதிக வருமானத்தை சம்பாதிக்க பழகிக் கொண்ட வீரர்கள் அனைவரும் நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் அக்கறையுடன் விளையாடுவதில்லை. இது போன்ற நிலைகள் தொடர்ந்தால் IPL போட்டிகள் அனைத்தையும் புறக்கணிப்போம் என இந்திய ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில் BCCI என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் எனவும் இந்திய வீரர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here