திரையரங்கில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு – உரிமையாளர்கள் புதிய யோசனை!!

0

கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களான தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல், ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்வது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

OTT பிரச்சனை:

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பல திரைப்படங்கள் நேரடியாக OTT இல் வெளியிடப்பட்டு வருகின்றன. முன்னணி நடிகர், நடிகைகளின் படங்களும் OTT இல் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். OTT வெளியீடுக்கு தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!!

இந்நிலையில் தியேட்டர்களை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசு, திரையரங்க உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளது. அக்கூட்டத்தில் ஐபிஎல், ஒலிம்பிக் போன்ற போட்டிகளை திரையரங்கில் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் முறையிடுவது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி தியேட்டரில் வெளியாகி ஒரு ஆண்டு கழித்தே OTT இல் படத்தை வெளியிடவும் திரையரங்க உரிமையாளர்கள் கோரி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here