நீட் தேர்வால் அரியலூர் மாணவர் தற்கொலை – முதல்வர் ரூ.7 லட்சம் நிதியுதவி!!

0
Tamilnadu CM
Tamilnadu CM

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த 19 வயது மாணவர் விக்னேஷ் மன உளைச்சல் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரூ. 7 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.

நீட் தேர்வு தற்கொலை:

தமிழகத்தில் நீட் தேர்வுகள் பல எதிர்ப்புகளையும் மீறி நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கென தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத காரணத்தால் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் பலர் நீட் தேர்வில் தோல்வி அடைகின்றனர். இதனால் தங்களது மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவு கலைந்த மன உளைச்சலில் பல மாணவர்கள் தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர். தமிழகத்தில் 2016ம் ஆண்டு மாணவி அனிதா, 2019ம் ஆண்டு மோனிஷா, ரித்துஸ்ரீ, வைஷியா, இந்த ஆண்டு சுபஸ்ரீ, ஹரிஷ்மா ஆகிய மாணவிகள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் – மதுரையில் பரபரப்பு!!

இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த 19 வயதான விக்னேஷ் எனும் மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிதியுதவி அறிவித்து உள்ளார். மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர் ரூ.7 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்டையில் அரசுப்பணியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தங்களது குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நல்வழிப்படுத்துமாறு பெற்றோர்களை அவர் அறிவுறுத்தி உள்ளார்.  மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக்கூடாது எனவும் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here