அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் – மதுரையில் பரபரப்பு!!

0

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர்ஸ் மாணவர்கள் காதில் பூ வைத்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். AICTE ஆல் ஏற்பட்டு உள்ள குழப்பத்தை உடனே தீர்க்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அரியர் ஆர்ப்பாட்டம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்த காரணத்தால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இறுதிப்பருவ தேர்வுகளை தவிர பிற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி அரியர் தேர்வுகளுக்காக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்த மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்தின் (AICTE) சார்பில் தமிழக அரசின் முடிவினை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கினால் பல்கலைக்கழகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்ட்டு இருந்தது. மேலும் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களது விளக்கத்தை தெரிவிப்போம் என AICTE தலைவர் கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யுஜிசி விதிகளின் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி – முதல்வர் திட்டவட்டம்!!

இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர்ஸ் மாணவர்கள் காதில் பூ வைத்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். AICTE ஆல் ஏற்பட்டு உள்ள குழப்பத்தை உடனடியாக தீர்க்கவும், தேர்ச்சி மதிப்பெண் பட்டியலை உடனே வெளியிடுமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியர் தேர்வுகள் ரத்தானதும் முதல்வருக்கு போஸ்டர், பேனர் என வைத்து அசத்திய மாணவர்கள், அதில் குழப்பம் நிலவுவதால் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here