நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் 13வது ஐ பி எல் 20 ஓவர் திருவிழா வரும் 29 ஆம் தேதி புது டெல்லி யில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
ஐபிஎல் பரிசு தொகை
கடந்த ஆண்டு(2019) ஐ பி எல் இல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு 20 கோடியும் , இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு 12.5 கோடியும் 3 வது மற்றும் 4வது இடம் பிடித்த அணிக்கு 8.75 கோடியும் பரிசு தொகையாக வழங்க பட்டது. 8 அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வடையும். அதற்கடுத்து ஐ பி எல் இன் இறுதி சுற்று மே 24 இல் நடைபெற உள்ளது.
பிசிசிஐ இன் மற்றம்
இந்நிலையில் தற்போது பிசிசிஐ பரிசு தொகையில் மாற்றம் செய்துள்ளது. விதிமுறை படி முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தரப்படும் பரிசு தொகையை பாதியாக குறைத்துள்ளது. அதன்படி பரிசு கோப்பையை வெல்லும் அணிக்கு 10 கோடி ரூபாய் வழங்க படும் என்று பிசிசிஐ அறிவித்து உள்ளது. இரண்டாவது பரிசாக 6.25 கோடி பரிசு தொகை வழங்கி படும்.அதே போல் 3வது மற்றும் 4வது பரிசாக 4.375 கோடி ரூபாய் வழங்கப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |