நாளை விண்ணில் பாயவிருந்த ஜிஐசாட் 1 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படாது – என்ன காரணம்..?

0

இஸ்ரோ மார்ச் 5ம் தேதி ஜிஐசாட் 1 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப் 1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருந்தது. தற்போது சில காரணங்களால் அது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

எதற்காக ஜிஐசாட் 1..?

2,268 கிலோ எடை கொண்ட இந்த ஜிஐசாட் 1 செயற்கைகோள் இந்தியாவின் புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் மற்றும் வானிலை நிலவரங்களை கண்காணித்து, புயல் உள்ளிட்ட, இயற்கை பேரிடர் காலங்களில் எச்சரிப்பதில் பெரிதும் பயன்படக்கூடியது. மேலும் இதில் பொருத்தப்பட்டு உள்ள நவீன கேமராக்கள், புவி பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் திறன் படைத்தது.

எதற்காக ஒத்திவைப்பு..?

இந்நிலையில் இந்த செயற்கைக்கோளானது நாளை திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படாது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. மேலும் சில தொழில்நுட்ப கோளாறு காரணங்களுக்காக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது ஏவப்படும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here