கோலாகலமாக துவங்கியது IPL 2023 திருவிழா….,நடிகைகள் தமன்னா & ராஷ்மிகா பங்கேற்பு….,

0
கோலாகலமாக துவங்கியது IPL 2023 திருவிழா....,நடிகைகள் தமன்னா & ராஷ்மிகா பங்கேற்பு....,
கோலாகலமாக துவங்கியது IPL 2023 திருவிழா....,நடிகைகள் தமன்னா & ராஷ்மிகா பங்கேற்பு....,

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் இன்று (மார்ச் 31) கோலாகலமாகத் துவங்கியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து இந்த துவக்க விழா நடத்தப்பட்டது. இந்த IPL 2023 போட்டிக்கான துவக்க விழா பிரபல பாலிவுட் திரைப்பட பாடகர் அர்ஜித் சிங் அவர்களின் பாடல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், அர்ஜித் சிங் தனது சூப்பர் ஹிட் பாடல்களான கேசரியா தேரா, சன்ன மெரேயா மற்றும் துஜே கிட்னா சாஹ்னே லகே ஹம் உள்ளிட்ட பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து பிரபல சினிமா நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் உற்சாகமான நடனத்தால் வரவேற்பு கொடுத்தனர்.

சென்னை to பெங்களூர் 25 நிமிடத்தில்., தமிழகத்தில் வர உள்ள மின்னல் வேக ரயில் சேவை!!!

இது தவிர, IPL 2023 தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டு தற்போது முதல் ஆட்டம் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here