கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபட்டால் புகார்., தேசிய உதவி எண் அறிமுகம்., பொதுமக்களுக்கு அறிவிப்பு!!

0

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்து வரும் சம்பவம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த குடிநீர் வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி அதை செய்ய தவறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2024-2025 live Update…, மகளிர் உரிமைத்தொகையில் பம்பர் ஆஃபர்!!

மேலும் அரசின் உத்தரவை மீறி கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் பட்சத்தில் அது குறித்து புகார் அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கழிவு நீர் அகற்றும்‌ பணியில் இயந்திரத்திற்கு பதிலாக மனிதர்கள் ஈடுபடும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக புகார் அளிக்க 14420 என்ற கட்டணமில்லா தேசிய உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here