தமிழக பட்ஜெட் 2024-2025 live Update…, கோவை, மதுரை, சென்னை, திருச்சி, சேலத்தில் இலவச WIFI!!

0
தமிழக பட்ஜெட் 2024-2025 live Update..., 7 முக்கிய அம்சங்கள்!!
தமிழக பட்ஜெட் 2024-2025 live Update..., 7 முக்கிய அம்சங்கள்!!

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (பிப்ரவரி 19) 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் முதன் முதலாக தாக்கல் செய்ய தொடங்கி உள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலில், சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் ஆகிய 7 அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட் 2024-2025

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும் என அறிவிப்பு.

சென்னை பூந்தமல்லி மற்றும் கோடம்பாக்கம் இடையே 2025 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் செயல்படும்.

2023 ஆம் ஆண்டை விட ரூ.578 கோடி கூடுதலாக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.20,043 கோடி நிதி ஒதுக்கீடு.மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ தேவை மற்றும் வேலைவாய்ப்பிற்காக 10 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டம்.

மதுரை, திண்டுக்கல், கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்.

பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் சீரமைப்பு மற்றும் மேம்பட்டுத் திட்டத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தில் வரும் ஜூன் மாதத்திற்குள் அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்களின் நலன்களுக்காக ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு

50,000 இளைஞர்களுக்கு அரசு பணி அடுத்த 2 ஆண்டுகளில் வழங்கப்படும் என்றும் ஜூன் மாதத்திற்குள் 10000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கு தற்காலிகமாக தடைசெய்யும் நேரத்தில் வழங்கப்படும் மானியம் ரூ.5000 லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக அறிய 2 டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க ரூ.4,625 கோடியில் விரிவான திட்ட அறிக்கை.

ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யூபிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி பெரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும் என அறிவிப்பு.

சென்னை பூந்தமல்லி மற்றும் கோடம்பாக்கம் இடையே 2025 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் செயல்படும்

2023 ஆம் ஆண்டை விட ரூ.578 கோடி கூடுதலாக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.20,043 கோடி நிதி ஒதுக்கீடு.

நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு

சென்னை உள்ள அடையாறு போன்ற ஆறுகளை மேம்படுத்துவதற்காக ரூ.1500 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் நீர்வளத்துறைக்கு ரூ.8,398 கோடி நீர்வளத்துறைக்கு செய்யப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலை அமைக்க திட்டம்.

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகை

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க ரூ.4,625 கோடியில் விரிவான திட்ட அறிக்கை.

அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் ரூ.500 கோடியில் நிதி ஒதுக்கி புதிய திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

புதிய அரசு தொழில்நுட்பம் அமையும் இடங்கள்..,

  • கடலூர் மாவட்டத்தில் வேப்பூர்
  • நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி
  • திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல்
  • திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம்
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றாம்பள்ளி
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி

கோவை, மதுரை, சென்னை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள 1000 இடங்களில் WIFI இலவசமாக வழங்கப்டும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

SSC, RRB மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களில் 1000 பேருக்கு சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் உறைவிட பயிற்சி மையம் அமைக்க ரூ. 6 கோடி நிதி ஒதிக்கீடு.

தமிழகத்தில் முதல்முறையாக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 3ஆம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் இருந்து 10% மானியமாக வழங்கப்படும் என்ற திட்டம் பட்ஜெட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

காப்பீடு தொகுப்பு நிதியில் இருந்து மருத்து காப்பீடு திட்டத்தை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு.

விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்கு கொடுக்கப்படும் சிக்கிச்சைக்கான உச்சவரப்பு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு.

சேலத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்கா மூலம் தலா 8000 பேருக்கு வேலைவாய்ப்பும் மேலும் ரூ.800 கோடி முதலீடும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் அமைக்க ரூ.111 கோடி ஒதுக்கீடு.

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT PARK) அமைக்க ரூ.1,100 கோடி ஒதுக்கீடு.

பள்ளிமாணவர்களின் திறனை மேம்படுத்த

தமிழகத்தில் பள்ளிமாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்கள் மேற்படிப்புமற்றும் ஆராய்ச்சி படிப்பை வெளிநாடுகளில் சென்று படிக்க உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி திறனை ஊக்கப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் 435 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

உயர் கல்விப் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.3,014 கோடி ஒதுக்கீடு. மேலும், கலை, அறிவியல் பொறியியல் கல்லூரிகளின் தரம் மேம்படுத்தவும் ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

10,000 மகளிர் சுய உதவிக்குழு

இந்த நிதியாண்டில் கூடுதலாக 10,000 மகளிர் சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

3 ஆம் பாலினத்தவர்கள் உயர்கல்வி

தமிழகத்தில் 3 ஆம் பாலினத்தவர்கள் உயர்கல்வி பயில விருப்படுபவர்களின் அனைத்து செலவையும் அரசே ஏற்கும்.

தமிழக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு ரூ. 13,720 கோடி ஒதிக்கீடு.

மகளிர் இலவச பேருந்து பயணத்திற்காக ரூ. 3050 கோடி ஒதிக்கீடு. மேலும், நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணம் விரிவாக்கப்பட உள்ளது.

தோழி விடுதி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் தோழி விடுதிகள் அமைப்பதற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு.

அகழாய்வு பணி

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணி மேற்கொள்ள ரூ. 5 கோடியும், கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்க ரூ. 17 கோடியும் ஒதிக்கீடு.

காலை உணவு திட்டம் மேலும் விரிவாக்கம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் காலை உணவு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதிக நிதி ஒதுக்கி இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்துதல் 

வழக்கத்தில் உள்ள புதுமைப்பெண் திட்டம் அரசு பள்ளிகளில் மேலும் விறுவிப்படுத்தப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மொழி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதி

மொழித் தொழிநுட்ப புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதிஉதவியாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மேலும் உலகின் தலைசிறந்த 100 நூல்களில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் இடம் பெற வழிவகை செய்வதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் இனிதே நடைபெற்ற நிலையில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதுவே அவரின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here