சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து – விமான போக்குவரத்து அமைச்சகம்!!

0
Flight
Flight

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் ஜூலை 15ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.

விமான போக்குவரத்து:

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி விட்டது. இதனால் ஜூன் 30ம் தேதி உடன் நிறைவடைய உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ள நிலையில் ஆகஸ்ட் 12ம் தேதி வரை அனைத்து விதமான பயணியர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

IndiGo Flight
IndiGo Flight (Example Image)

70% மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் – கேரளா மின்வாரியம் முடிவு..!

இந்நிலையில் வரும் ஜூலை 15ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு அனைத்து பயணியர் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் இந்தியர்களை சொந்த ஊர் அழைத்து வர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் விமான சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச விமான சேவை ரத்து உத்தரவு சரக்கு விமான சேவைக்கு பொருந்தாது எனவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு விமான சேவை படிப்படியாக அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here