70% மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் – கேரளா மின்வாரியம் முடிவு..!

0

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் மின் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இச் சலுகையால் கேரளா மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மின் கட்டணத்தில் மானியம்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு காலம் என்பதால் பல மாநிலங்களில் மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து கேரளாவிலும் அதே நிலைமை நிகழ்ந்ததால் அம்மாநில மின் கட்டணத்தில் மானியம் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி மானியத்தை கணக்கிட புதிய மென்பொருள் உருவாக்கப்படும் வரை பயனீட்டாளர்கள் 70 சதவீதம் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மின்கட்டணம்..!

ஏப்ரல் 19 முதல் ஜூன் 19 தேதி வரையிலான காலகட்டத்திற்கே மின் கட்டண மானியம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டுவேலை செய்வோர் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக மின் கட்டணத்தை 5 தவணைகளில் செலுத்தலாம் எனவும் கேரள மின்வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here