Sunday, May 19, 2024

சர்வதேச விமானங்கள் இயங்காததற்கான காரணம்?? ஹர்தீப்சிங் பூரி விளக்கம்!!

Must Read

சர்வதேச விமானங்களை இயக்காதது ஏன் என்பது பற்றி விமான போக்குவரத்து அமைச்சர் “ஹர்தீப்சிங் பூரி” விளக்கமாக கூறுகிறார். கொரோனவால் கடந்த மார்ச் 23ம் நாள் அன்று சர்வதேச விமானங்களின் சேவை நிறுத்தபட்டது. இன்னும் சில நாடுகளில் தடைகளை தொடர்வதால் தான் சர்வதேச விமானங்களை இயக்க முடியவில்லை என்று கூறினார்.

சர்வதேச விமானங்கள் ஏன் இயங்கவில்லை??

இன்று உலகத்தையே ஆட்டி கொண்டிருக்கும் கொரோனாவால் தான் கடந்த மார்ச் 23ம் தேதி விமானங்களின் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் தடை விதிக்கப்பட்டது. மருத்துவமனை மற்றும் மெடிக்கல் ஷாப்கள் மட்டும்தான் இயங்கி கொண்டிருந்தன. இதனால் பல லட்சம் பேர் வேலை பறிபோனது, முதலாளிகளுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது. ஏழை குடும்பகளின் நிலை கவலைக்கிடமாக மாறியது.

சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் அங்கு பணி புரியும் பலபேருக்கு வேலை இல்லாமல் போனது. மே 6-ம் தேதி முதல் சில நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கபட்டன. சர்வதேச விமானங்களுக்கான தடையை இன்னும் சில நாடுகள் பின்பற்றுகின்றன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பல சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சவுதி அரேபியா உட்பட சில நாடுகள் நம் நாட்டில் இருந்து பயணியரை அழைத்து வர இன்னும் அனுமதிக்கவில்லை. அந்நாடுகளில் தடைகளை அகற்றினால்” பயணியர் விமானத்தை இயக்க அரசு தயாராக” உள்ளது என்று விமானபோக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -