செப்.21 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0
schools-mask

நாடு முழுவதும் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் மற்றும் திறன் பயிற்சி மையங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து விதமான திறன் பயிற்சி மையங்களும் மூடப்பட்டு உள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பகுதியளவு பள்ளிகளை திறக்கவும், திறன் பயிற்சி மையங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

  • நாற்காலிகள், மேசைகள் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  • வகுப்பறைகளில் போதுமான சமூக இடைவெளியையும், அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • மடிக்கணினிகள், நோட்புக், பேனா போன்ற பொருட்களை மாணவர்களிடையே பகிர அனுமதிக்கக்கூடாது.
  • 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விருப்ப அடிப்படையில் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுவதற்காக பள்ளிகளுக்கு அனுமதிக்கலாம். இது அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும்.
  • மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 50 சதவீத ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை ஒரே நேரத்தில் பள்ளிகளுக்கு அழைத்து பணி வழங்கலாம்.
  • அடிக்கடி தொடப்படும் கதவு, பட்டன்கள், நாற்காலிகள், பெஞ்சுகள், வாஷ்ரூம்கள் மற்றும் வழக்கமான ஆய்வகங்கள், லாக்கர்கள், பார்க்கிங் பகுதிகள், வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பும், நாள் முடிவிலும் பிற பொதுவான பகுதிகள் என அனைத்தும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here