நீட் தேர்வு குறித்து அதிரடி கருத்து – நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு புகார்!!

0

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தினால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இது தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நீட் – வலுக்கும் எதிர்ப்பு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. கொரோனா பரவலுக்கு மத்தியில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்ற தேர்வில் 85-90% மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பல நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி இல்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். மேலும் திருமணம் முடிந்து தேர்வெழுத வந்த புதுப்பெண்ணை தாலி, மெட்டி போன்றவற்றை கழட்டி வாங்கிக்கொண்டு தேர்வறைக்குள் அனுமதித்த கொடூரமும் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு பயத்தால் சனிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Actor Surya

இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை,

Actor surya's statement
Actor surya’s statement

நீதிமன்ற அவமதிப்பு:

நடிகர் சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி A.B.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘கொரோனா அச்சத்தில் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லால் போய் தேர்வெழுத வேண்டும் என உத்தரவிடுகிறது’. இது நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையும் அவமதிப்பதாக இருப்பதாக கூறிய நீதிபதி சுப்ரமணியன், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here