தஞ்சையில் உள்வாங்கிய கடல் – சிரமத்தில் மீனவர்கள்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தஞ்சை மாநிலத்தில் கடல் உள்வாங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சை:

தமிழகம், கேரளா, புதுவை போன்ற பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மிக கன மழை பதிவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் அரங்கேரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாகவே பலத்த காற்று வீசி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் தங்களது பணியை மேற்கொள்ள முடியாமல் பாதியிலேயே திரும்பினர். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதிகளில் சூறைக்காற்றின் வேகம் சற்று குறைந்தது. இதன் காரணமாக கடலுக்குள் செல்ல மீனவர்கள் முடிவு செய்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடம் – மத்திய சுகாதாரத்துறை பகிர் தகவல்!!

ஆனால் இன்று காலை கடலை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சுமார் 200 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி இருந்தது. மேலும் அனைத்து நேரங்களிலும் தண்ணீர் இருக்கும் வாய்க்கால் தண்ணீர் இல்லாமல் வறட்சியாக காணப்பட்டது. கடல் உள்வாங்கியதன் காரணமாக படகுகளை நீண்ட தூரம் கடலுக்குள் இழுத்து சென்று மீன்பிடிக்க சென்றனர் மீனவர்கள். அதுமட்டுமல்லாமல் இதன் காரணமாக மீனவர்கள் கரை திரும்பவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here