‘எனது ஜாதிப்பெயரை நீக்க மாட்டேன், அது என்னுடைய அடையாளம்’ – செலின் கவுண்டர் ட்வீட்!!

0
celin gounder 1
celin gounder 1

அமெரிக்காவின் இந்த ஆண்டு அதிபரான ஜோ பைடன் அவர்களால் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த செலின் கவுண்டர் என்ற பெண்மணி இடம் பிடித்துள்ளார்.

செலின் கவுண்டர்

அமெரிக்காவில் செலின் கவுண்டர் தொற்று நோய் பிரிவின் சிறப்பு  மருத்துவர், பத்திரிகையாளர், தயாரிப்பாளர் மற்றும் நியூயார்க்கில் உள்ள க்ராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர்க்கு வயது 43 ஆக இருக்கிற நிலையில் பல துறையில் சாதனை படைத்துள்ளார். இவர் அமெரிக்காவை இருப்பிடமாக கொண்டாலும் செலின் கவுண்டரின் தந்தை நடராஜ் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

celin gounder
celin gounder

இவரது தந்தை நடராஜ் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள பெருமாபாளையம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரது மகளான செலின் கவுண்டர் அமெரிக்காவில் ஒரு உயர்பொறுப்பில் இருப்பது அந்த கிராமத்திற்கு பெருமை அளிக்கிறது என அந்த கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் பதிவு

மொடக்குறிச்சி மக்கள் செலின் கவுண்டர் அமரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்த செய்தியை அவரது உறவினர்கள் பெருமாபாளையத்தில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். அதில் செலின் கவுண்டர் பங்கேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் அவரை பார்த்து ஏன் உங்களது பெயரில் உள்ள சாதிப் பெயரை இன்னும் நீக்காமல் இருக்கிறீகள்? என்று கேள்வி கேட்டனர்.

celin gounder
celin gounder

அதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது தந்தை நடராஜ் 1970யில் அமெரிக்காவில் வந்து குடிபெயர்ந்தார், அங்கு இருக்கிற மக்களுக்கு நடராஜ் என்ற பெயர் உச்சரிக்க சிரமப்பட்டக் காரணத்தால் அவர் தனது பெயருடன் “கவுண்டர்” என்பதை சேர்த்து கொண்டார். பின்பு செலின் கவுண்டர் “நான் எனது பெயரை திருமணத்திற்கு பின்பும் நீக்க மாட்டேன். அது எனது அடையாளம் மற்றும் வரலாறு ” இவ்வாறாக தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here