குக் வித் கோமாளியில் கலந்து கொள்ளும் ஷகிலா – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு தான். என்ன நிகழ்ச்சி என்றாலும் டாப் ரேஞ்சில் கலக்கி விடுவார்கள். அந்த வகையில் 2019 இல் ஒளிபரப்பானது தான் குக் வித் கோமாளி. இப்பொது இரண்டாவது சீசன் வெளியாக உள்ள நிலையில் அதில் கலந்து கொள்ள போகிறவர்களின் பெயரும் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியும் ஒன்று. சமையல் போட்டி வித்தியாசமான முறையில் காமெடி கலந்து எடுக்கப்பட்டதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவாங்கி, மணிமேகலை, பாலா மற்றும் புகழுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் ரம்யா பாண்டியனுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. எந்த யூடூப் சேனலை எடுத்தாலும் அதில் குக் வித் கோமாளி பிரபலங்களே இன்டெர்வியூ கொடுத்து வந்தனர். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரவேற்பு இருந்தது. எப்பொழுது சனிக்கிழமை வரும் என்று காத்திருந்தவர்கள் பலர்.

ஆனால் அந்த சீசன் முடிவடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு ரசிகர்கள் பலரும் அடுத்த சீசனுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டும் இருந்தனர். இந்நிலையில் இப்பொழுது சீசன் 2 தொடங்கவுள்ளது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தீபாவளி நன்னாளில் இந்த சீசன் தொடங்கவுள்ளது. வழக்கம் போல கோமாளிகளாக மணிமேகலை, ஷிவாங்கி, பாலா மற்றும் புகழ் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் குக்காக யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என பலரும் ஆர்வத்தில் இருந்தனர்.

bigg boss 4

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் மற்றும் மலையாள கவர்ச்சி நாயகியான ஷகிலா இதில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here