விதவிதமான கோலங்கள் போடும் முறை, போட்டோவுடன் – தீபாவளி ஸ்பெஷல்!!

0

தீபாவளியை வண்ணமயமாக மாற்ற வண்ண வண்ண ரங்கோலி கோலங்களை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கு காலையில் எழுந்து முதல் வேலையே கோலம் போடுவது தான். கோலம் போடுவது ஒரு கலை. கோலம் போடுவதால் பெண்களின் உடல் அமைப்பு அழகாக மாறுகிறது. காலையில் எழுந்து வாசலை தெளித்து, குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.

கோலங்களின் முக்கியத்துவம்:

கோலங்களில் பல வகைகள் உள்ளது. நம் முன்னோர்கள் கோலம் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். வீட்டின் முன்பு செங்கல் பொடி அல்லது பச்சரிசியை அரைத்து கோலம் போட்டார்கள். ஆனால், இன்றைக்கு கோலம் போடுவதில் பல சுலபமான முறைகள் வந்துவிட்டது. கடைகளில் கோல அச்சு, வண்ண வண்ண நிறங்கள், ஸ்டிக்கர் போன்ற எண்ணற்ற முன்னேற்றங்களை நாம் பார்க்கலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோலம் போடுவதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் உருவாகிறது. மேலும், இதில் பல அறிவியல் சார்ந்த உண்மைகள் அடங்கியுள்ளன. மஞ்சள் தெளித்து கோலம் போடுவதால் கிருமிகள் அழிந்து விடுகிறது. இதனால், நோய்கள் பரவாது. அதிகாலையில் கோலம் போடும் பொழுது வீசும் சுத்தமான இயற்க்கை காற்று நம் உடலுக்கு அழகை கொடுக்கிறது. கோலம் போடும் பொழுது கால்களால் மிதிக்க கூடாது. ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டால் வீட்டிற்கு ஆகாது என்று கூறப்படுகிறது.

பச்சரிசிமாவு கோலம்:

பச்சரிசியை அரைத்து கோலம் போட்டு, அதில் மஞ்சள், குங்குமம் வைத்து நடுவில் சாணி புள்ளையார் பிடித்து பூசணி பூ அல்லது செம்பருத்தி பூ வைப்பதால் கோலத்தில் மஹாலக்ஷ்மி குடியிருப்பதாக கருதப்படுகிறது. மேலும், வீட்டிற்கு கண் திருஷ்டி ஏற்படாது. பச்சை அரிசியால் கோலம் போடுவதால் எறும்பு மற்றும் பறவைகள் சாப்பிடும். இதனால் நமக்கு புண்ணியம் கிடைக்கிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

 

பூ கோலம்:

பூக்களால் கோலம் போடும் போது நம் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. கண்களுக்கு, ஒரு விருந்தாக அமைகிறது. மேலும், இதிலிருந்து வரும் வாசனை அன்றைய நாள் முழுவதும் நம்ம மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

உப்பு கோலம்:

உப்பில் வண்ண நிறங்களை வாங்கி கலக்க வேண்டும். அழகான கோல உப்பு தயாராகிவிடும். உப்பினால் கோலம் போடும் பொழுது உப்பு கரைவது போல் நம் கஷ்டங்களும் கரைந்துவிடும் என்று கருதப்படுகிறது.

 

விளக்கு கோலம்:

வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் விளக்கு கோலம் போட்டு அதில் தீபம் ஏற்றி வைத்தால் மஹாலட்சுமி குடியிருப்பாள். வீட்டில் செல்வம் பெருகும்.

பின்னல் கோலம்:

பின்னல் கோலங்களை பெண்கள் சரியாக போட்டு முடித்துவிட்டால் அவர்களுக்கு குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும் சுலபமாக சரி செய்துவிடும் வல்லமை உள்ளவர்கள் என்று கருதப்படுகிறது.

ரங்கோலி:

அனைவராலும் சுலபமாக போடக்கூடிய கோலம் ரங்கோலி தான். புள்ளி எதுவும் வைக்க தேவை இல்லை. நம் கைகளுக்கு வந்த வடிவத்தில் போட்டு வண்ண பொடிகளை தூவினாலே அழகாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here