Monday, April 29, 2024

10 முக்கிய நிறுவனங்களுக்கு இனி சலுகைகள் வழங்கப்படும் – அமைச்சரவையில் ஒப்புதல்!!

Must Read

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 10 முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையும் வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் முடிவு:

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

manufacturing industries in india
manufacturing industries in india

முக்கியமான 10 உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தி, வாகன உற்பத்தி உட்பட 10 நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையாக மத்திய அரசு சார்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் விளக்கம்:

இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “ஏசி, எல்.இ.டி மற்றும் அது போன்ற பொருட்களின் உற்பத்திக்கு இந்தியாவில் ஊக்கம் வழங்கப்பட்டு வருகின்றது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற நடவடிக்கைகள் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. முக்கிய துறைகளாக கருதப்படும் மருத்துவம், மின்னணு போன்ற உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்க ஊக்கத்தொகை அரசு சார்பில் தரப்பட உள்ளது.

ஐபிஎல் 2021 சீசனில் ஒன்பதாவதாக புதிய அணி?? பிசிசிஐ திட்டம்!!

textile industries
textile industries

இதற்கான ஒப்புதல் இன்று மத்திய அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளதாவது, “தொழிற்சாலைகளில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறதோ அதனை பொறுத்தே சலுகை அரசு சார்பில் வழங்கப்படும்” இவ்வாறாக அவர் கூறியுள்ளார். உணவு பொருட்கள் பதப்படுத்தல், உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துறைவாரியாக ஊக்கத்தொகை விவரம்:

  • ஜவுளி துறைக்கு 10,863 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
  • உணவு சம்பந்தமான துறைகளுக்கு 10,900 கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • சோலர் மின்னுற்பத்தி துறைக்கு 4,500 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
  • இரும்பு உற்பத்தி துறைக்கு 6,322 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
  • ஆட்டோமொபைல் துறைக்கு 57,042 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்.. சுட்டெரிக்கும் வெயிலால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -