‘விராட் கோஹ்லி காலி’ – 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி:

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள், டி20 போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும் வென்றது. அடுத்தபடியாக இன்று முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டு மைதானத்தில் தொடங்கி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அணி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். இதில் 2வது பந்தில் ப்ரித்வி ஷா கிளீன் போல்ட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் மயங்க் அகர்வால், புஜாரா ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வந்தனர். 18வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய முதல் பந்தில் மயங்க் அகர்வால் 17 ரன்னில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். முதல் டெஸ்ட்டிலேயே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருவது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி மற்றும் புஜாரா ரன்களை குவிக்க தொடங்கினர். 49வது ஓவரை லியொன் வீசினார். அதன் 2வது பந்தில் புஜாரா கேட்ச் கொடுத்து 43 ரன்களில் வெளியேறினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ரஹானே, கேப்டன் விராட் கோஹ்லியுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோஹ்லி 8 பவுண்டரிகள் விளாசி 74 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே 42 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். 16 ரன்கள் எடுத்த விஹாரி ஹெசல்வுட் பந்தில் அவுட் ஆனார். அடுத்தடுத்து 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போது களத்தில் அஸ்வின் மற்றும் சஹா பேட்டிங் செய்து வருகின்றனர்.

அணி 11 வீரர்கள் விபரம்:

இந்திய அணி – பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா

ஆஸ்திரேலியா அணி – ஜோ பர்ன்ஸ், மத்தேயு வேட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

லைவ் ஸ்கோர்ஸ்:

2 ஓவர்கள் முடிவில் – இந்தியா : 1 – 1, மயங்க் அகர்வால் 0 (2), புஜாரா 1 (8)

21 ஓவர்கள் முடிவில் – இந்தியா : 34 – 2, புஜாரா 14 (74), விராட் கோஹ்லி 2 (11)

55 ஓவர்கள் முடிவில் – இந்தியா : 107 – 3, விராட் கோஹ்லி 39 (111) , ரஹானே 2 (20)

84 ஓவர்கள் முடிவில் – இந்தியா : 207 – 6, சஹா 0 (10), அஸ்வின் 1 (1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here