இந்தியாவின் முதல் வெற்றி – பிளாஸ்மா சிகிச்சையில் குணமான கொரோனா நோயாளி.!

0

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக வருகிறது. இதற்கு மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் வல்லுநர்கள் தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலேயே முதல்முறையாக டில்லியை சேர்ந்த கொரோனா வைரஸ் பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒருவர் 400 மி.லி பிளாஸ்மாவை தானமாக வழங்கலாம் எனவும், அதைக்கொண்டு இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

மேக்ஸ் தனியார் மருத்துவமனை

டில்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்.,4ம் தேதி கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயதுடைய நபருக்கு, தொற்று உறுதியானது. காய்ச்சல், சுவாச பிரச்னைகளுடன் சிகிச்சையில் இருந்து வந்தவரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஏப்.,8ல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Max case: Delhi Medical Council sends case to disciplinary panel ...

உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், அவரது குடும்பத்தினர், பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்ததாக மருத்துவமனை கூறுகிறது. இதனால் ஏப்.,14ல் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு முறை சோதனை செய்ததில் எதிர்மறை முடிவுகள் வரவே, அந்த நபர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Delhi patient responding well to plasma therapy, says hospital ...

ஆனாலும், இவருடன் அனுமதிக்கப்பட்டிருந்த இவரது 80 வயது தந்தைக்கும் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது உடல் மிகவும் மோசமடைந்ததால் ஏப்.,15ல் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்தி குணமடைய செய்வது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here