இந்தியாவில் 96 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – 3 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!

1

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் குறிப்பிட்ட அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இன்று வரை 96,169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3,029 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,824 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,198 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டாப் 4 கொரோனா பாதித்த மாநிலங்கள்:

  1. மஹாராஷ்டிரா – 33,053 பேர்
  2. குஜராத் – 11,379 பேர்
  3. தமிழ்நாடு – 11,224 பேர்
  4. டெல்லி – 10,054 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here