உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – இந்திய அணிக்கு வாய்ப்பு??

0
India's cricket team captain Virat Kohli, center, celebrates with teammates after winning the second cricket test match against South Africa in Pune, India, Sunday, Oct. 13, 2019. (AP Photo/Rajanish Kakade)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் அணியாக நியூஸிலாந்து அணி தேர்வாகியுள்ளது. தற்போது மற்றொரு அணியாக தேர்வாக இந்தியா அணிக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

டெஸ்ட் போட்டிக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியை நடத்த 2019-21 வரை அறிவித்தது. இதற்கு அணிகளை புள்ளிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடக்கவுள்ளது. தற்போது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் இறுதி போட்டிக்கு முதல் அணியாக நியூஸிலாந்து அணி தேர்வாகி அசத்தியுள்ளது. மற்றொரு அணியாக ஆஸ்திரேலியா அணி தேர்வாக அதிக வாய்ப்பு இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு அதற்கான வாய்ப்பு தகர்ந்தது. காரணம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் வென்றால் தான் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை.

இந்தியாவிற்கு வாய்ப்பு:

தற்போது இறுதி போட்டிக்கு மற்றொரு அணியாக இந்தியாவிற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம் தற்போது இந்தியா 71.70 சதவீதத்துடன் இந்த பட்டியலில் முதல் இடத்தில உள்ளது. நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த பட்டியலில் இந்தியாவிற்கு பின்னால் தான் உள்ளது. ஆனால் 70 சதவீதம் பெற்ற நியூஸிலாந்து அணி இறுதி போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளது.

மீம்ஸ்களை பார்த்து வயிறுகுலுங்க சிரித்தேன் – மாளவிகா மோகனன் ட்வீட்!!

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியா 2-0, 2-1, 3-0, 3-1, 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால் இந்திய உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதி போட்டிக்கு தேர்வாகும். அல்லது இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தேர்வாக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here