இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா…, உலக கோப்பையில் சாதனைகளை குவித்து அசத்தல்!!

0
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா..., உலக கோப்பையில் சாதனைகளை குவித்து அசத்தல்!!
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா..., உலக கோப்பையில் சாதனைகளை குவித்து அசத்தல்!!

ஒருநாள் உலக கோப்பை தொடரில், இந்திய அணியானது நேற்று (நவம்பர் 2) இலங்கை அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 14 புள்ளிகளுடன் அரையிறுதிக்கும் முன்னேறி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த போட்டியின் சாதனை துளிகள்:

  • இந்தியாவின் முகமது ஷமி இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், உலக கோப்பை வரலாற்றின் ஓர் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அதிக முறை (3) வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
  • உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் (14 போட்டிகள் 45 விக்கெட்டுகள்) ஜாகிர் கானை முந்தி முதல் இடத்தை எட்டி உள்ளார்.
  • ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் 6 சிக்ஸர்களை விளாசிய அதன் மூலம், உலக கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், அதிக ரன்கள் வித்தியாசத்தில் தனது சிறந்த வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here