IND vs AUS: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா…, தொடரை கைப்பற்றி அசத்தல்!!

0
IND vs AUS: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..., தொடரை கைப்பற்றி அசத்தல்!!
IND vs AUS: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..., தொடரை கைப்பற்றி அசத்தல்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IND vs AUS:

சர்வதேச ஆடவர் ஹாக்கி அணியானது, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கு தற்போது தயாராகி வருகிறது. இதற்காக, இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டது. இதன்படி, கடந்த 26ம் தேதி முதல் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடரின் முதல், இரண்டு போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற 3வது போட்டியில் எழுச்சி கண்ட இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், இந்த தொடரின், 4வது போட்டி நடைபெற்றது.

இந்திய வீரரை துரத்தும் விமர்சனம்…, பதிலடி கொடுத்த பயிற்சியாளர்!!

இதில், ஆரம்பத்தில் வேகம் காட்டிய இந்திய வீரர்களில் தில்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற வழி வகுத்தார். ஆனால், இதன் பிறகு, ஆஸ்திரேலியா தொடர் தாக்குதலை மேற்கொண்டு 5 கோல்களை அடித்து, 5-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற வெற்றி வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, கடைசி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here