நடிகை சில்க் ஸ்மிதாவை பற்றி யாருக்கும் தெரியாத அந்த ஒரு விஷயம்.., உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

0
நடிகை சில்க் ஸ்மிதாவை பற்றி யாருக்கும் தெரியாத அந்த ஒரு விஷயம்.., உண்மையை உடைத்த பிரபல நடிகை!!
நடிகை சில்க் ஸ்மிதாவை பற்றி யாருக்கும் தெரியாத அந்த ஒரு விஷயம்.., உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா குறித்து பிரபல நடிகை சொன்ன முக்கிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

நடிகை சில்க் சுமிதா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக ஜொலித்து வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. நடிகர் வினு சக்கரவர்த்தி வீட்டில் வேலை பார்க்க வந்த பெண் தான் நடிகை சில்க் ஸ்மிதா. அவர் நடிப்பதில் ஆர்வம் இருப்பதை பார்த்த வினு சக்கரவர்த்தி அவரை வண்டி சக்கரம் என்ற படத்தில் மது விற்கும் பெண்ணாக நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகு நடிகை சில்க் ஸ்மிதாவின் மார்க்கெட் அதிகரிக்க தொடங்கியது. இந்த படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடித்ததால் அவருக்கு சில்க் ஸ்மிதா என்று அழைக்கப்பட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளங்கள் இருந்தன. இப்படி ரசிகர்களை கவர்ந்த நடிகை சில்க் ஸ்மிதா சிறு வயதில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தற்போது வரை அவர் இறப்பு ரசிகர்களுக்கு மர்மமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் இறப்பதற்கு முதல் நாள் நடந்ததை பற்றி பிரபல முன்னாள் நடிகை அனுராதா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பழைய படத்தை தூசி தட்டும் அபிஷேக் பச்சன்.., அதுவும் தமிழ் படம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

அதாவது கடந்த 1996ம் ஆண்டு சில்க் ஸ்மிதா செப்டம்பர் 23 தேதி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நடிகை அனுராதாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது சில்க் ஸ்மிதா தனது வீட்டிற்கு வர சொல்லி அழைத்திருக்கிறார். அனுராதா வெளியே பிஸியாக இருந்ததால் நாளை வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு சில்க் சரி நாளைக்கு வா என்று தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த நாள் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று அனுராதா தெரிவித்துள்ளார். மேலும் சில்க் என்னை ஏன் வர சொன்னார் என்று பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். அவள் அழைத்த போது நான் சென்றிருந்தால் இது மாதிரி நடந்திருக்காது என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here