#INDvsAUS அஷ்வின், பும்ராஹ் அசத்தல் பந்துவீச்சு – 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி அளவில் துவங்கியுள்ளது. கிறிஸ்துமஸ்க்கு மறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் பாக்ஸிங் டே மேட்ச் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. கடந்த 17 ஆம் தேதி டெஸ்ட் தொடர்கள் ஆரம்பமானது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தனர். தற்போது இன்று மெல்போர்னில் வைத்து 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போட்டி புகழ்மிக்க பாக்ஸிங் டே போட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை இன்று கேப்டன் கோஹ்லி இல்லாத நிலையில் ரஹானே அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்கத்திலேயே அணியின் முன்னணி பந்துவீச்சாளாரான அஷ்வினை உபயோகப்படுத்தியுள்ளார் ரஹானே. அது தக்க பலனை வழங்கியுள்ளது. இன்று அவரது பந்து வீச்சு அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் பந்து அவர் கணித்தது போல் ஸ்விங் ஆகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்மேன்கள் திணறி வருகின்றனர்.

அவர் வீசிய 13வது ஒவரில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் மாத்திவ் தனது ஆட்டத்தை இழந்தார். அதன் பின் களமிறங்கிய ஸ்மித் கடந்த ஆட்டத்தை போலவே இந்த ஆட்டத்திலும் அஷ்வினிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

முதல் போட்டியில் விராட் கோஹ்லி அஸ்ஹவினை 30வது ஓவருக்கு மேல் தான் உபயோகப்படுத்தினார். ஆனால் தற்போதைய கேப்டன் ரஹானே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் அசத்தலாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

தற்போதைய ஸ்கோர் நிலவரம் (52 ஓவர்கள் முடிவில்):

ஆஸ்திரேலிய அணி 136 – 5
க்ரீன் 6* (21)
பெயின் 0*(7)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here