சுனாமி தாக்குதலின் 16ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – கடலில் பால் ஊத்தி அஞ்சலி செலுத்தும் மக்கள்!!

0

இன்று தமிழகத்தில் சுனாமி தாக்குதலின் 16ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் உள்ள பல்வேறு கடலோர கிராம மக்கள் சுனாமியில் இறந்தவர்களுக்காக மீனவர்கள் கடலுக்கு பால் ஊத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுனாமி நினைவு தினம்:

நாம் இயற்கைக்கு நிறைய பாதிப்பு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் இறக்கை நம்மை பாதிக்க ஆரம்பித்தால் நம்மால் வாழ முடியாது. சான்றாக தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் பலர் உயிர் இழந்துள்ளனர். அதேபோல் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு கொடிய சம்பவம் அரங்கேறியது. 2004 இல் இதே டிசம்பர் 26 ஆம் தேதி அன்று பெரும் சுனாமி ஒன்றால் தமிழகம் தாக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகள் பெரும் பாதிப்படைந்தது. இந்த சுனாமியால் தமிழகத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேலானோர் தங்களது உயிரை இழந்தனர். மேலும் இந்தியாவை பொறுத்தவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்து 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதற்காக தமிழக மக்கள் மற்றும் மீனவர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மேலும் கடலூர் முதுநகரில் உள்ள மக்கள் ஊர்வலமாக சென்று அங்குள்ள கடலில் பால் ஊற்றி மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர். கடலூரில் மட்டும் சுனாமியால் சுமார் 400 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#INDvsAUS அஷ்வின், பும்ராஹ் அசத்தல் பந்துவீச்சு – 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!!

மேலும் கன்னியாகுமரி, வேதாரண்யம் போன்ற மாவட்டங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி கடலில் பால் ஊற்றி வருகின்றனர். வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மக்களோடு சேர்ந்து கடலில் மலர் தூவி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here