ரிலீஸ்க்கு முன்பே 220 கோடி வசூலா..! விஜய் மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு..!

0

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயை தொடரும் ஐடி ரெய்டு..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு பிஸ்னஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மாஸ்டர் திரைப்படம் 220 கோடி ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முதல் சோதனை..!

மாஸ்டர் திரைப்படத்தின் இணை தாயாரிப்பாளரான லலித் குமாருக்கு 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் லலித் குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் பிகில் தயாரிப்பாளர்கள் மற்றும் விஜய் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here