பிளாஸ்மா தானம் செய்தால் 5 ஆயிரம் ஊக்கத்தொகை – ஆந்திரா முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

0

ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..!

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,30,557 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 68 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1281ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 60,024 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 69,252 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அறிகுறிகளைப் பொறுத்து வழங்கப்படும் மருந்துகளைக் கொண்டே கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது இல்லாமல் பிளாஸ்மா தானம் மூலமும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்மா தானம் செய்தால் ஊக்கத்தொகை..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த ஒருவர் உடலில் வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். எனவே, அவர்களின் பிளாஸ்மாவை பிறருக்கு செலுத்துவதன் மூலம் அவரும் விரைவில் வைரஸில் இருந்து குணமடைகிறார். இந்தமுறை பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் இதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

plasma
plasma

அமெரிக்காவில் முதல் முறையாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாய் உயிரிழப்பு!!

இந்நிலையில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக்க கூட்டத்தில் மாநிலத்தில் நிலவி வரும் தற்போதையை நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here