Friday, March 29, 2024

ஊட்டச்சத்து நிறைந்த ” ராகி அடை” – ட்ரை பண்ணி அசத்துங்க!!

Must Read

நாம் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளோம், வீட்டில் இருக்கும் குழந்தைகள் நல்ல டேஸ்டியான உணவு இல்லையென்றால் ஸ்னாக்ஸ் வேண்டும் என்றும் அடம்பிடிப்பர். அவர்களுக்கு டேஸ்டியான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ் ரெசிபி ” ராகி அடை” இதோ.. இது செஞ்சு அசத்துங்க!!

தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு – 2 கப்
  • வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது)
  • தேங்காய் துருவல் – அரை முடி
  • கொத்தமல்லி – அரை கப் ( பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை:

  • முதலில், ராகி மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, நன்றாக பிசையவும், கோதுமைமாவு பிசையும் பக்குவத்தில் பிசைந்து, தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின், இந்த மாவில், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, இவை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.
  • இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டி வைத்து கொள்ளுங்கள்.
  • இப்பொது, தோசைக்கல்லை கையைவைத்து, தட்டி வைத்த பொருட்களை போட்டு பொன்னிறமாக எடுத்து விடவும்.

அவ்ளோ தான்… சூடான மற்றும் ஹெல்த்தியான ” ராகி அடை ” ரெடி!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -