இளையராஜாவை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது – பிரசாத் ஸ்டுடியோ திட்டவட்டம்!!

0
music director ilayaraja
music director ilayaraja

இளையராஜாவை ஸ்டுடியோவிற்கு உள்ள செல்ல அனுமதிக்க முடியாது என்று பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகம் கூறியுள்ளது. இதனை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.

இளையராஜா:

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவிற்கான பல ஆயிரக்கணக்கான பாடல்களை இயக்கியுள்ளார். அவர் 1976இல் இருந்து பிரசாத் ஸ்டுடியோஸில் வைத்து தனது அனைத்து பாடல்களையும் இயக்கி வந்துள்ளார். தற்போது அந்த இடத்தை காலி செய்வதற்காக இரு தரப்பினருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் இளையராஜா தனது ஸ்டுடியோவை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார் என்று பிரசாத் ஸ்டுடியோஸ் தெரிவித்தது . ஆனால் தனது கோப்புகள், கருவிகள் போன்ற பொருட்கள் அனைத்தும் அங்கு இருப்பதாகவும் அதனை எடுப்பதற்கும், தன்னை ஒருமுறை தியானம் செய்ய அனுமதிக்குமாறு இளையராஜா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அந்த பொருட்கள் அனைத்தும் சுமார் 50 லட்சம் மதிப்புடையது, அதற்கு ஏதேனும் ஆனால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மனு அளித்துள்ளார்.

ஆனால் இதனை ஏற்க பிரசாத் ஸ்டுடியோஸ் மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பினர் இளையராஜா அங்கு சென்று தியானம் செய்ய அனுமதிக்குமாறு கேட்டனர். ஆனால் இதற்கு பிரசாத் ஸ்டுடியோஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது “இனி இளையராஜாவை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்க மாட்டோம், அவர்கள் தரப்பினுள் எவரேனும் வந்து பொருட்களை எடுத்து செல்லலாம். மேலும் அவர் வந்தால் அங்கு கூட்டம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவும் என்று கூறியுள்ளார்கள்.

மஞ்சள்நிற சேலையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த ராசி கண்ணா!!

இதை ஏற்க நீதிபதி ஏற்க மறுத்தார். இளையராஜா மற்றும் அவரது வழக்கறிஞர், பிரசாத் ஸ்டூடியோ நபர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர், மற்றும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து இந்த 5 தரப்பு மட்டும் செல்லும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். இதற்கு பிரசாத் ஸ்டூடியோவிடம், இளையராஜா தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் இந்த வழக்கை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார் நீதிபதி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here