Wednesday, March 27, 2024

ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் கண்டிப்பாக தோற்பார் – எம்.எல்.ஏ ராஜவர்மன் சர்ச்சை பேச்சு!!

Must Read

சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ராஜேந்திர பாலாஜி தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மிரட்டியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை கருத்து:

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் இருவரும் எப்போதுமே பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ராஜவர்மன் தன்னை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படை வைத்து மிரட்டியதாக தெரிவித்தார். இது கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. இதனை அடுத்து முதல்வர் நேரில் சென்று இவரிடம் பேசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜவர்மன் இருவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்றனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில் மீண்டும் ராஜவர்மன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவித்து சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது, “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இவர் என்னை மிரட்டியது குறித்து தலைமைடத்தில் புகார் அளிக்க உள்ளேன்”

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடர் – தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு??

“அதிமுக விருதுநகர் தொகுதியில் தோற்றதற்கு காரணம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான். அவர் விருதுநகரில் உள்ள 4 தொகுதிகளில் எங்கு போட்டியிட்டாலும் அவர் தோல்வியினை அடைவார்” இவர் இவ்வாறாக அமைச்சர் மீது புகார் அளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விவசாயிகளுக்கு சூப்பர் டூப்பர் நியூஸ்., 5 லட்சம் டன் கொள்முதல்? மத்திய அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

கடந்த ஆண்டு நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்ததால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு வெங்காயம் ஏற்றுமதிக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -