ஒருநாள் போட்டி தரவரிசை – விராட் மற்றும் ரோஹித் தொடர்ந்து முன்னிலை!!

0

தற்போது சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் புள்ளிப்பட்டியல் வெளிவந்துள்ளது. இதனை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த முறையும் பேட்டிங் தரவரிசையில் விராட் மற்றும் ரோஹித் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கிறார்கள்.

ஐசிசி:

தற்போது கொரானாவில் இருந்து மீண்டு அனைத்து நாடுகளும் விளையாட்டு போட்டிகளை அதிகமாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக வரும் காலங்களில் சர்வதேச போட்டிகள் அதிகம் நடக்கவுள்ளது. தற்போது ஐசிசி நிர்வாகம் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் மற்றும் அணிகளின் புள்ளி பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் பேட்டிங் வரிசையில் இந்த முறையும் இந்தியா அணியின் விராட் மற்றும் ரோஹித் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பேட்டிங் தரவரிசை:

விராட் கோஹ்லி 870 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரோஹித் சர்மா 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் பாபர் அசாம் 837 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பௌலிங் தரவரிசை:

ட்ரெண்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் 701 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் ஜஸ்பிரிட் பும்ராஹ் 700 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

ஆல் ரவுண்டர் தரவரிசை:

சாஹிப் அல் ஹசன் 420 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், முகமத் நபி 294 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் கிறிஸ் வோக்ஸ் 281 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அணிகளின் தரவரிசை:

இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா அணி 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 108 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here