டேஸ்டியான பிச்சி போட்ட சிக்கன் வறுவல் – செய்வது எப்படினு பாப்போம்..!

0

தேவையான பொருட்கள்

pichu potta kozhi recipe - Kannamma Cooks

சிக்கன் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், மல்லித்தூள் – 2 ஸ்பூன், மிளகு பொடித்தது – 1 ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

Pichi Potta Chicken Fry - Shredded Chicken Fry - YouTube

இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். தண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும். சுவைாயன பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here