2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 2 முறை டாஸ் போட்டதற்கான காரணம் – சங்கக்கரா ருசிகர தகவல்..!

0

இந்தியா அணி 26 ஆண்டுகளுக்கு பின் மகேந்திர சிங் டோனி தலைமையிலான டீம் கொண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 2011 ஆம் ஆண்டில் நடந்த உலககோப்பையில் இலங்கை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.இந்த ஆட்டத்தில் டாஸ் நிகழ்வு இருமுறை நடைபெற்றது.இதற்கான காரணத்தைக் இந்திய வீரர் ஆர். அஸ்வினுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் இலங்கை அணியின் கேப்டனாக அப்போது இருந்த சங்கக்காரா கூறினார்.

இருமுறை எதற்காக டாஸ் போடப்பட்டது

கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும் அவர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன் 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இருந்து போட்டியில் இலங்கை   நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை இந்திய அணி டோனி (91 ரன்), கவுதம் கம்பீர் (97 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. முன்னதாக இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. உலக கோப்பை வரலாற்றில் இரண்டு தடவை ‘டாஸ்’ என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். குழப்பத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய வீரர் அஸ்வினுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் இலங்கை அணியின் கேப்டனாக அப்போது இருந்த சங்கக்காரா இதற்கான காரணத்தைக் கூறினார்.

அவர் கூறுகையில், இறுதி ஆட்டத்தில் பூவா, தலையா? கேட்பதற்காக இந்திய கேப்டன் தோனி  நாணயத்தை மேலே சுண்டி விட்டார். ஆனால் ரசிகர்களின் கரவொலியால் நான் என்ன கேட்டேன் என்பது தோனிக்கு சரியாக கேட்வில்லை. அப்போது நான் ‘பூ’ என்று சொன்னதாக அவர் கூறினார். ஆனால் நான் ‘தலை’ தான் கேட்டதாக கூறினேன். போட்டி நடுவரும் நான் தான் ‘டாஸ்’ வென்றது போல் கூறினார். ஆனால் தோனி அதை ஏற்கவில்லை. இதனால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இன்னொரு முறை ‘டாஸ்’ போடலாமே என்று டோனி சொன்னார். அதில் மறுபடியும் நான் கேட்டபடியே ‘தலை’ விழுந்தது என தெரிவித்தார்.மேலும் ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் அரைஇறுதியின் போது காயமடைந்ததால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. அது தான் எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மேத்யூஸ் மட்டும் 100 சதவீத உடற்தகுதியுடன் இருந்திருந்தால் நிச்சயம் நான் பந்துவீச்சைத் தேர்வு செய்து இரண்டாவதாக பேட்டிங் செய்திருப்போம் என்றார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here