சூப்பரான “பிஸ்தா பர்பி” ரெசிபி – தீபாவளி ஸ்பெஷல்!!

0

தீபாவளிக்கு ஒரு சூப்பரான ஸ்வீட் செய்யலாம் வாங்க. தீபாவளினாலே ஒரே கொண்டாட்டம் தான். பட்டாசு, புது டிரஸ், ஸ்வீட்னு வீடே களைகட்டும். நாம வீட்ல இருக்குற எல்லாரையும் எப்படி ஒரு சூப்பரான ஸ்வீட் செஞ்சு அசத்தலாம்னு பார்க்கலாம். ஹெல்த்தியான மற்றும் நாக்குல வச்சலே கரைய கூடிய ஒரு ஸ்வீட் தான் ‘பிஸ்தா பர்பி’ வாங்க செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பிஸ்தா பருப்பு – 1 கப்

சர்க்கரை – 3 கப்

தண்ணீர் – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை:

 

முதலில் ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு பிஸ்தா பருப்புகளை பொண்ணிறமாக வரும்வரை நன்கு வதக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறியபின் மிக்சியில் போட்டு அளவான தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மூன்று கப் சர்க்கரைக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தித்தவுடன் சர்க்கரையை போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வரும் வரை காய்ச்ச வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாகு வருவதை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரை கரைசலை எடுத்து ஒரு கப் தண்ணீரில் போட்டு பார்க்க வேண்டும். கரையாமல் அப்படியே இருந்தால் பாகு பதம் வந்துவிட்டது என்று அர்த்தம். பிறகு ஒரு தட்டை எடுத்து, நெய்யை தடவி தனியாக வைத்து கொள்ளவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது சர்க்கரை பாகில் அரைத்த பிஸ்தா கலவையை கொட்டி கிளறவும். ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய் தூளை சேர்த்து தேவையான அளவு நெய்விட்டு கிளறவும். பிறகு, நெய் தடவிய தட்டில் கலவையை கொட்டி சமமாக பரப்பவும். சிறிது நேரம் கழித்து சூடேறியதும் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி கொள்ளலாம். இப்பொழுது சுவையான பிஸ்தா பர்பி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here