அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 % இடஒதுக்கீடு கோரி வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு!!

0
மருத்துவர்
மருத்துவர்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அதாவது ஸ்டேட் போர்டு மாணவர்களையும் இடஒதுக்கீட்டில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இடஒதுக்கீடு:

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்த்த பிரீத்தி என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டேன். பின்பு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி 250 மதிப்பெண் பெற்றுள்ளேன். தற்போது தமிழக அரசு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுத்துள்ள இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் இந்த சலுகை வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Madurai High court
Madurai High court Branch

7.5% இடஒதுக்கீட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் அரசு மற்றும் அரசு உதவியை பெறும் பள்ளிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அரசின் அனைத்து உதவிகளும் மற்றும் இலவச பொருட்களும் இவர்கள் பெறுகிறார்கள். எனவே 7.5% இடஒதுக்கீட்டில் இவர்களையும் இணைக்க வேண்டும் என்று வாதம் செய்தார்கள்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அவர்கள், கடந்த மூன்று ஆண்டு அரசு உதவி பெறும பள்ளிகளில் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்று தகவல் வேண்டும் மற்றும் இதுகுறித்து தமிழக அரசு பதில் கூற வேண்டும் என்றும் உத்தரவில் .தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here