தமிழகத்தில் நவ.16 முதல் பள்ளிகள் திறப்பு!! பெற்றோர், ஆசிரியர்களின் முடிவு என்ன??

0
மாநிலம் முழுவதும் மார்ச் 16 முதல் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
மாநிலம் முழுவதும் மார்ச் 16 முதல் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழக்தில் பள்ளிகள் திறப்பை குறித்து பெற்றோர், ஆசிரியரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதனை குறித்து பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அவர்களது கருத்து கேட்பு முடிவை இன்று மாலையே அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

கருத்துக் கேட்பு

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரியை நவ. 16 ஆம் தேதி திறக்கலாம் என்ற அறிவிப்பை அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளியை திறக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தில் மொத்தம் 12,500 தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கலந்து கொண்டுள்ளன.

parents teacher meeting
parents teacher meeting

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைத்து பள்ளிகளிலும் இதனை குறித்து கருத்துக்கேட்பு நடைபெறுகிறது. அதில் சில பெற்றோர்கள் மட்டுமே பள்ளிகளை திறக்கலாம் என்று கூறுகின்றன. சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 தினங்களிலே 575 மாணவர்களுக்கும், 829 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் பள்ளி திறப்பை காலதாமதம் ஆக்கலாம் என்று தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் சங்கம்:

பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் கூறுகையில், கொரோனா காலத்தில் இன்னும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத சூழல் நிலவி வருகிறது. அந்த சுழலில் மாணவர்களுக்கு பள்ளி திறப்பு அவசியமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

school reopen
school reopen

பள்ளிகள் திறந்த பின் வயதில் மூத்த ஆசிரியர்களின் மூலமும் கொரோனா பரவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மாணவர் பெற்றோர் கூட்டமைப்பு:

சில முன்னெச்சரிகளுடன் பள்ளியை திறப்பது தான் சிறந்தாக அமையும் என்று மாணவர் பெற்றோர் கூட்டமைப்பின் இளைய பெருமாள் கூறுகிறார். தற்போது தமிழக அரசு அறிவித்த தேதியில் பள்ளிகளை திறந்தால் மாணவர்களின் வாழ்வில் விளையாடுவது போல் அமையும். ஆகையால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பண்டிகைகள் முடிந்த பின்பும், அன்றைய சூழலை பொறுத்தும் பள்ளி திறப்பை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here