சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு – நலங்கு மாவு!!

0

முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், குழிகள், பருக்கள் போன்ற பிரச்சனைகளை எப்படி சுலபமான முறைகளில் நீக்குவது என்பதை பார்க்கலாம். முகத்தை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காக புது புது கிரீம்களை பயன்படுத்தி இருந்த அழகும் குறைந்துவிடுகிறது. இதற்கு அதிக சிரமப்பட தேவையில்லை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகான முகத்தை பெற முடியும்.

நலங்கு மாவு:

நம் முன்னோர்கள் நமக்காக பழக்கப்படுத்திய விஷயங்களில் ஓன்று நலங்கு மாவு. மூலிகை குணம் கொண்ட பொருட்களை நலங்கு மாவில் சேர்ப்பதால் சருமத்திற்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது. சொரியாசிஸ், தேமல், அரிப்பு, தழும்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் நலங்கு மாவு பயன்படுத்தும் பொழுது முழுமையாக சரியாகிவிடும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள், தாமரை இதழ்கள், கடலை பருப்பு, பாசி பருப்பு, கோரை கிழங்கு, பூவந்திக்கொட்டை, வெட்டி வேர், பாதாம், கசகசா, கஸ்தூரி மஞ்சள், அரப்பு தூள், ஆவாரம் பூ, வெந்தயம், நன்னாரி வேர், ஆரஞ்சு தோள் இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவற்றை தேவையான அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்தது கொள்ளவும். குளியல் சோப்பிற்கு பதிலாக இந்த நலங்கு மாவை பயன்படுத்தலாம். அன்றைய நாள் முழுவதும் உடல் நறுமணமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். சோப்பு பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பவர்கள் குளித்த பிறகு நலங்கு மாவை பச்சை பாலில் கலந்து 45 நிமிடம் தேய்த்து கழுவினால் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வராது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நலங்கு மாவை பயன்படுத்தலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே நலங்கு மாவை பயன்படுத்தி வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். முக்கியமாக ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இயற்கையான முறைகளை பின்பற்றி நலமான வாழ்வை வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here